பூமி தோன்றியது முதல் உலக வரலாறு
பூமி தோன்றியது முதல் உலக வரலாறு
'நாதன்' என்ற புனைபெயரைக் கொண்ட ஐ.சண்முகநாதன் 19.4.1935-ல் திருச்சியில் பிறந்தார். பெற்றோர்: கே.வி.ஐயன் பெருமாள் பிள்ளை - சீதா ஜானகி அம்மாள்.
19 - a / g * l வயதிலேயே 'தினத்தந்தி'யின் உதவி' ஆசிரியரானார். அமரர் சி.பா.ஆதித்தனாரிடம் குருகுல வாசம் பயின்று, செய்தி ஆசிரியராகவும், பின்னர் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். 42 ஆண்டு காலம் தினத்தந்தியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பிறகும், ஆலோசகராக 'தினத்தந்தி'யில் அவர் பணி தொடர்கிறது.
'நாதன்' என்ற புனைபெயரில் இவர் எழுதிய "அதோ அந்தப்பறவை" "இதய தாகம்", "ஒரு பறவையின் சரணாலயம்”, “இதயம் எழுதிய கவிதை” முதலிய நாவல்கள் புகழ் பெற்றவை. "அதோ அந்தப்பறவை" இந்தியிலும், சமஸ்கிருதத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இவரது எழுத்துப் பணியின் சிகர நூல்களாக "ஒரு தமிழன் பார்வையில் 20-ம் நூற்றாண்டு வரலாறு”, “கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை உலக வரலாறு”, “தமிழ்நாடு - சங்க காலம் முதல் செம்மொழி காலம் வரை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
இவருடைய ஐந்து வருட கடும் உழைப்பில் உருவானவை, இந்த நூல்கள்.
சண்முகநாதனின் மனைவி ரெங்கநாயகி. இவர்களுக்கு ஒரு மகன், 3. மகள்கள்.
பூமி தோன்றியது முதல் உலக வரலாறு - Product Reviews
No reviews available