அங்கொரு நிலம் அதிலொரு வானம்
அங்கொரு நிலம் அதிலொரு வானம்
பயணங்கள் எப்போதுமே சுவாரஸ்ய அனுபத்தைத் தருபவை. மனிதனுக்குள் பலவித மாற்றங்களை, புத்துணர்ச்சியை ஏற்படுத்துபவை. கொலம்பஸின் பயணம் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது. வாஸ்கோடகாமாவின் பயணம் இந்தியாவின் கடல் வழியைக் கண்டுபிடித்தது. இப்படி பயணங்கள் தேடல்களை நமக்குள் தந்து கொண்டிக்கின்றன. மனிதன் மட்டுமல்ல, பல நாட்டின் நிலங்களை, கடல்களைக் கடந்து வேடந்தாங்கல் வந்திறங்கும் ஒரு பறவையின் பயணமும் அதற்கு புதிய அனுபவங்களைக் கொடுக்கிறது. இப்படி ஏதோ ஒரு தேடலின் பயணங்கள்தான் உலகைப் புதுப்பித்துக்கொண்டே வருகிறது. கனடா, இங்கிலாந்து, கத்தார் உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட மருத்துவர் சிவராமன் அந்தந்த நாடுகளின் கலாசாரம், மனிதர்களின் பழக்கவழக்கங்கள், பார்க்க வேண்டிய இடங்கள், சூழலியல் மாறுபாடுகள் என ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் அங்கு தமக்கேற்பட்ட அனுபவங்கள் பற்றியும் இந்தப் பயணக் கட்டுரைகளில் பதிந்திருக்கிறார். மேலும் உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் நம் தமிழ்க் கலாசாரத்தை, பண்டிகைகளை எப்படியெல்லாம் போற்றி வருகின்றனர் என்றும், அந்தந்த நாடுகளின் உணவு கலாசாரம் பற்றியும் இந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இனி, பயணத்தைத் தொடருங்கள்...
அங்கொரு நிலம் அதிலொரு வானம் - Product Reviews
No reviews available