அம்பேத்கர்
அம்பேத்கர்
அஜயன் பாலா அவர்கள் எழுதியது.
பன்னெடுங்காலமாக நீங்கள் அழுது புலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். துன்பம் தோய்ந்த உங்கள் குரல்களைக் கேட்கும் போதெல்லாம் என் இதயம் வெடித்துச் சிதறுகிறது. வளர்ந்தபின், இந்த உலகில் அவமானங்களை நீங்கள் அடைவதற்குப் பதிலாக, உங்கள் தாயின் கருவறையிலேயே நீங்கள் இறந்திருக்கக்கூடாதா!. எனக் கூட்டங்களில் ஆவேசமாக முழங்கினார் அம்பேத்கர்.
மக்கள் அலைகடலென ஆர்ப்பரித்தனா. விளைவு..1927 மார்ச்சில் வெடித்தது மகத்தான 'மகத் குளம்' போராட்டம்.மகர்களான தாழ்ததப்பட்டவர்களுக்கு மட்டும் அந்தக் குளத்தில் குளிக்கவோ குடிக்கவோ தண்ணீர் மறுக்கப்பட்டு இருந்தது. ஆகாயத்தையோ காற்றையோ அளிக்கத் தெரியாத மூடர்களிடம் தண்ணீர் மட்டும் வசமாக மாட்டிக்கொண்டது. அந்தப் பகுதியில் வேறு எங்கும் போதிய தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர். அதன் விளைவுதான் அம்பேத்கர் மேடையில் ஒலிவாங்கியின் முன் வந்து நின்றனர். "சில ரொட்டித் துண்டுகளுக்காக மனித உரிமையையே விற்பது மானங்கெட்டதனம்!" - வழக்கம் போல அவரது சுளீர் சாட்டையடிப் பேச்சு மக்களை உணர்ச்சி அலைகளின் மீது ஓடமாகத் தத்தளிக்கவைத்தது. " எந்தக் குளத்தில் நமக்கு நீர் மறுக்கப்பட்டதோ அந்தக் குளத்தை நோக்கி நடப்போம்!" என உத்திரவிட்டார். அடுத்த நொடி, செளதார் குளம் நோக்கி பெரும் ஜனத்திரள்....
அம்பேத்கர் - Product Reviews
No reviews available