அமரகவியின் தெய்வீகக் கனவுகள்
அமரகவியின் தெய்வீகக் கனவுகள்
கனவுகள் இரண்டு விதம். சாதாரண மானிடன் காணும் கனவுகள். மற்றொன்று மகான் காணும் கனவுகள். இதில் மானிடன் காண்பது பொய்யான விஷயங்கள், ஐம்பொறிகள், புலன்கள், மனம், கற்பனை, மாயை, முன் செய்வினைபயன்களால் உண்டான நினைவுகள் போன்றவைகள்தான் மானிட கனவுகளை உருவாக்குகின்றன. மாறாக மகான்கள் காண்பது உண்மைக் கனவுகள். அவைகள் இறைவனால் தோன்றுபவை. எதிர்காலத்தில் ஏற்படப் போகும் சித்திகளையும் தெய்வ தரிசனம் மற்றும் அருளை முன்னரே அறிவிக்கும் ஓர் அற்புதமாகும். மேலும், இந்தப் புத்தகத்தில் காணும் கனவுகள் அமரகவி சித்தேஸ்வரருக்கு இறையருளால் ஏற்பட்டவைகளாகும். அவரது ஆன்மீக வளர்ச்சியை அளந்து காட்டும் ஒரு அளவு கோலாக விளங்குகின்றன.
மேலும், தெய்வீகக் கனவுகள் தோன்றுவதன் காரணம், காலம், குறிக்கோள் மற்றும் விளக்கங்களை மிகத்தெளிவாக இப்புத்தகத்தில் தரப்பட்டுள்ளன. மக்கள் இதனைப் படித்து தங்களது ஆன்மீக வளர்ச்சியை செம்மையாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
வேதகால மகரிஷி கள், 18 சித்தர்கள், பிரம்ம நிஷ்டர்கள் போன்றவர்களுக்கு மட்டுமே ஏற்படும் ஆன்மீகம் மற்றும் தெய்வீக அனுபவங்களாகும் இக்கனவுகள். கலியுகத்தில் இது போன்ற தெய்வீக கனவுகள் தொடர்ந்து உண்டாகி பல பிரம்ம இரகசியங்களை விளக்கியுள்ளதை ஓவியங்களாக வரைந்து ஆன்மீகத் தத்துவ விளக்கத்தோடு மக்களுக்கு உதவும் வகையில் இந்த தெய்வீக புத்தகம் வெளிவந்துள்ளது.இந்த தெய்வீக புத்தகத்தைப் படித்து மக்கள் தங்களது ஆன்மீக வளர்ச்சிக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
அமரகவியின் தெய்வீகக் கனவுகள் - Product Reviews
No reviews available