அல்லங்காடிச் சந்தைகள் (வேரல்)
அல்லங்காடிச் சந்தைகள் (வேரல்)
மூலதனமே வசீகரமான கடவுளாக மாறிப்போயுள்ள பின்காலனியக் காலகட்டத்தில் அதன் உள்ளாடைகளை இலக்கியம் வழியே உருவ வேண்டியதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் யவனிகாவின் கவிதைகளும் கட்டுரைகளும் பேசுகின்றன.
மூலதனத்தின் தந்திரங்களை அறியும் மனத்துடன் பின்காலனியச் சூழலைப் புரிந்துகொண்டு அதை இன்றைய மார்க்சியத் தேவையுடனும் நவீனக் கோட்பாடுகளின் பொருத்தப்பாட்டுடனும்
இணைத்து எழுதவேண்டியதன் அவசியத்தையே அவர் சமகால மாற்றுகளாக வலியுறுத்துகிறார்.
போர் ஓய்ந்த இலங்கை எப்படி உலகமயத்தின் வேட்டைக்காடாக மாற்றப்படுகிறது என்னும் கட்டுரை இன்றைய ஈழ அணுகுமுறையாளர்களுக்கு முக்கியமான ஒன்று. குறிப்பாக இன்றைய உலகமயச் சந்தைப் போக்கில் வாங்கத் திராணி உள்ளவர்கள் திராணி அற்றவர்கள் என்பதாக மக்களைப் பிரித்துப்போட்டுள்ள வணிக விகாரங்களை மேலும் நாம் வாசிக்கிறோம்.
சுகுணா திவாகர்
அல்லங்காடிச் சந்தைகள் (வேரல்) - Product Reviews
No reviews available