அடேங்கப்பா... அமெரிக்கா
அடேங்கப்பா... அமெரிக்கா
உலகின் பொருளாதார மாற்றத்தைத் தீர்மானிக்கக் கூடிய ஒரு வலிமையான சக்தியாக இன்றைய அமெரிக்கா உள்ளது. மற்ற நாடுகளில் நடைபெறும் தேர்தல்களைவிட அமெரிக்காவில் நடைபெறும் தேர்தல் அனைவராலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. அந்த நாட்டின் அதிபர் பெயரை அனைவரின் உதடுகளும் உச்சரிக்கின்றன. ‘ஒலிம்பிக்ஸ் வெற்றி’ என்றாலும், ‘ராணுவப் படை’ என்றாலும், ‘புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு’ என்றாலும்... முன்னணியில் நிற்பது அமெரிக்காதான். எனவே, அமெரிக்காவைப் பற்றி பேசுவதிலும், அந்த நாடு தொடர்பான கூடுதல் தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பதிலும் அனைவருக்குமே ஆர்வம் இருக்கிறது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்பவர்தான் அமெரிக்காவை முதன்முதலில் கண்டுபிடித்தார். இது பதினைந்தாம் நூற்றாண்டில் நடந்தது. பதினைந்தாம் நூற்றாண்டுக்கும் இருபத்தோறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்கா செய்த சாதனைகளும், அடைந்த மாற்றங்களும் அளவிட முடியாதது. ‘ஒருமுறையாவது அமெரிக்க மண்ணை மிதித்துவிட வேண்டும்’ என்ற கனவுகளோடு இருப்பவர்கள் ஏராளம். அந்தக் கனவுகளுக்கு உரம்போடும் செய்திகளின் தொகுப்புதான் ‘அடேங்கப்பா... அமெரிக்கா!’ அமெரிக்காவின் அரசியல், வரலாறு, கலை, கலாசாரம், இலக்கியம், சுற்றுலா தலங்கள் மற்றும் புகழ்பெற்ற மனிதர்கள் பற்றி சுவையான தகவல்கள் நூல் முழுக்கக் கொட்டிக் கிடக்கின்றன. நாம் அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களில் பாதிக்கும் மேற்பட்டவை அமெரிக்க விஞ்ஞானிகளின் கொடைதான் என்பதும், இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது உங்களுக்கே தெரியவரும். அமெரிக்கா என்னும் பிரமாண்டம், இந்நூலில் பொது அறிவு விஷயங்களாக நிரம்பி வழிகின்றன. பள்ளி _ கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் யாவருக்கும் ஒரு வழிகாட்டியாகப் பயன்படும் தகவல்களாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார் நூலாசிரியர் மு.அப்பாஸ் மந்திரி
அடேங்கப்பா... அமெரிக்கா - Product Reviews
No reviews available