ஆரோக்கிய பெட்டகம்
ஆரோக்கிய பெட்டகம்
உணவே மருந்து என்பதும், மருந்தே உணவு என்பதும் சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு அத்துப்படியாக இருந்தன. என்ன உணவில் என்ன சத்துகள் உள்ளன? என்ன உணவை, எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்? எந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது என்பதை எல்லாம் விரல் நுனியில் தெரிந்து வைத்திருந்தார்கள். உணவைப் பற்றிய இந்தப் புரிதல் அவர்களை ஆரோக்கியமாக வைத்திருந்தது. நோய்நொடி இல்லாமல் அவர்களை அதிக ஆண்டுகள் வாழவும் வைத்தது. துரதிர்ஷ்டவசமாக இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு உணவுப் பொருட்களைப் பற்றிய புரிதல் இல்லவே இல்லை. இன்னொரு பக்கம், நாகரிக வாழ்வின் தவிர்க்க முடியாத அம்சமாக உணவுப் பொருட்கள் எல்லாம் எளிதில் கெட்டுப்போகாமல் இருக்க கெமிக்கல்களை கொண்டு பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. உணவு உட்கொள்கிற ஒவ்வொருவரும் தவிர்க்கவே முடியாமல் கெமிக்கல்களையும் உண்ண வேண்டிய கொடுமையான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இச்சூழலிலிருந்து விடுபட்டு, இயற்கைப் பொருட்களை அறிந்து, அவற்றை எளிதாக, இனிதாகச் சமைத்து ருசிக்க வழிகாட்டுகிறது இந்நூல்.
‘காபி நல்லது’ என்கிறது ஒரு ஆய்வு. ‘காபியை விட டீயே மகத்தானது’ என்கிறது இன்னொன்று.
‘சூரியகாந்தி எண்ணெயே சூப்பரானது’ என்கிறது ஒரு விளம்பரம்.
‘யார் சொன்னது? ஆலிவ் எண்ணெயே ஆரோக்கியமானது’ என அதை மறுக்கிறது இன்னொரு விளம்பரம்.
‘உருளைக்கிழங்கை உடனே நிறுத்துங்க’ என்கிறார் ஒரு மருத்துவர்.
‘உருளைக்கிழங்கு ஊட்டம் நிறைந்தது. தாராளமா கொடுக்கலாம்’ என்கிறார் இன்னொரு மருத்துவர்.
‘டயபடீஸா? பச்சரிசி பக்கமே போகாதீங்க... புழுங்கலரிசிதான் பெஸ்ட்’ என்கிறது ஒரு புத்தகம்.
‘அரிசிக்கும் சர்க்கரைக்கும் சம்பந்தமே இல்லை’ என்கிறது வேறொரு கையேடு.
நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள்...எது சரி, எது தவறு எனத் தெரியாமல் திணறித் தவிக்கும் உங்களைத் தெளிவுபடுத்துவதே இந்தப் புத்தகம்! இனி உங்கள் வீட்டு கிச்சனில் அஞ்சறைப் பெட்டிக்கு அருகில், ஆலோசனைப் பெட்டகமாக விளங்கும் இந்த ஆரோக்கிய பெட்டகத்தை மறக்காமல் பத்திரப்படுத்துங்கள்! காலம் முழுக்க உங்களுக்கு பயன்படும்!
ஆரோக்கிய பெட்டகம் - Product Reviews
No reviews available