ஆரிய திராவிட மாயை
ஆரிய திராவிட மாயை
மத்திய ஆசியப் பகுதிகளிலிருந்து வடமேற்கு இந்தியாவிலுள்ள கைபர் மற்றும் போலன் கணவாய்களின் வழியாகப் படையெடுத்து வந்து, சிந்து கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்தவர்களை அடிமையாக்கியவர்களே ஆரியர்கள்’ என்னும் கருத்தினை, பள்ளிப் பருவத்திலேயே நமது பிஞ்சு உள்ளத்தில் பதியவைத்துவிட்டார்கள். இக்கருத்தின் மீது எவ்விதமான ஆய்வுபூர்வமான கேள்விகளையும் முன்வைக்காமல், நமது தமிழ்ச் சமூகமும் அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டது. இன்று இக்கருத்து முற்றிலும் தவறானது என்று ஆய்வாளர்கள் உறுதியாகச் சொல்லிவிட்டார்கள்.
ஆரிய – திராவிட இனவாதத்தின் துவக்கப் புள்ளியாக அமைந்த இக்கருதுகோளின் தோற்றுவாய், அதனைத் தீவிரமாகப் பற்றிக்கொண்டு திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் வளர்ந்த விதம், அதனால் ஏற்பட்ட விளைவுகள், தற்கால நிலைமை எனப் பல்வேறு விஷயங்களையும் ஆய்வியல் நோக்கோடு அலசி ஆராய்கிறார் நூலாசிரியர் கு.சடகோபன். மொழியியல், இன வரைவியல், அரசியல், தத்துவம் மற்றும் ஆன்மிகம் என அறிவுத்துறையின் பல்வேறு தளங்களில் நின்று நூலாசிரியர் ஆய்வுபூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் பல கருத்துகளை ஆணித்தரமாக முன்வைக்கிறார்.
கு.சடகோபன் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச் சூழலில் மேடைதோறும் முழங்கும் குரல். காமராஜர், ஈவெரா, மபொசி போன்ற பல தலைவர்களுடன் நேரடியாக விவாதிக்கும் வாய்ப்புப் பெற்றவர்.
ஆரிய திராவிட மாயை - Product Reviews
No reviews available