ஆன்றோர் உதிர்த்த ஆன்மிக முத்துகள்
ஆன்றோர் உதிர்த்த ஆன்மிக முத்துகள்
பாட்டி, அத்தை, மாமா என்ற அன்பு கலந்த கலாசாரம் காலத்தின் சீற்றத்தால் கரைந்துவிட்டது. முதியவர்கள் நன்னெறிக் கதையோடு சாதத்தை ஊட்டி குழந்தைகளை வளர்த்த காலம் இப்போது வெறும் கனவே. அந்த முதியோர்கள் இப்போது இல்லங்களில் இல்லை; ‘முதியோர் இல்லங்களில்’ இருக்கிறார்கள்!
வீட்டில் இருக்கும் இந்தக் குறையை வெளியே சில மேடைகள் நிறைவு செய்கின்றன. ஆமாம், கோயில் பிராகாரங்களில் மட்டுமே கேட்கப்பட்டுவந்த ஆன்மிகச் சொற்பொழிவுகள் இப்போது பல மேடைகளில், பொழுதுபோக்கு அரங்குகளில்கூட ஒலிக்கின்றன. ஒருநாள் நிகழ்ச்சியாக மட்டுமின்றி, தொடர் நிகழ்ச்சிகளாக, பல நாட்களுக்கு அந்தச் சொற்பொழிவுகள் தேனமுதை வாரிவாரி வழங்குகின்றன. இதிகாச, புராண, காவியங்களிலிருந்து அப்படிச் சொற்பொழிவுகள் நிகழ்த்துபவர்கள் அள்ளித் தந்த அமுதுதான் எத்தனை இனிமை, சுவை!
திருமுருக கிருபானந்த வாரியார் ஒருமுறை சொன்னார்: ‘‘எதையாவது பார்த்துக்கொண்டேயிருந்தால் கண்கள் வலிக்கும்; எதையாவது தின்று கொண்டேயிருந்தால், அல்லது பேசிக்கொண்டேயிருந்தால் வாய் வலிக்கும். ஆனால் எவ்வளவுதான் கேட்டுக்கொண்டிருந்தாலும், காது வலிக்காது. ஆமாம், இரு காது - வலி இருக்காது!’’
அத்தகைய சொற்பொழிவாளர்கள் சிலருடைய உரைகளிலிருந்து பிழியப்பட்ட கரும்புச் சாறாக இந்நூல் அமைகிறது. இதனைப் பருகப் பருக மனவலிமையும், ஆன்மபலமும் கூடும் என்பது நிச்சயம்..
ஆன்றோர் உதிர்த்த ஆன்மிக முத்துகள் - Product Reviews
No reviews available