ஆளப்பிறந்தவன் பாகம் 1 செம்பியன் வீழ்ச்சி
Author: எஸ்.விஜயகுமார் & B.R..மகாதேவன்
Category: வரலாற்று புதினங்கள்
Available - Shipped in 5-6 business days
ஆளப்பிறந்தவன் பாகம் 1 செம்பியன் வீழ்ச்சி
சோழர்களின் புலிக் கொடி அதி உயரத்தில் பறந்து கொண்டிருந்த காலம். அல்லது அதி உயரத்தில் இருந்து வீழத் தொடங்கி இருந்த காலம்.
மூன்றாம் குலோத்துங்கச் சோழன் அரியணையில் இருந்தான். பாண்டிய மன்னன் ஜடாவர்மனைத் தோற்கடித்ததோடு, தனக்குக் கப்பம் கட்டும் சிற்றரசனாக ஆக்கியிருந்தான். சுந்தர பாண்டியன் மீண்டெழுந்து ஆட்சியைப் பிடிக்கிறான். சூடுபிடிக்கிறது அரசியல் களம்.
அடிபட்ட வேங்கைகள் பழி வாங்குவதற்கு ஏற்ற தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தன. வெல்லும் வம்சம் பக்கம் அணி திரள வழக்கம்போல் தயாராகிக் கொண்டிருந்தனர் குறு நில மன்னர்கள்.
மாறி மாறி போரிட்டுக் கொள்ளும் சோழ பாண்டியர் நீங்கலாக இன்னொரு ராஜ வம்சமும் இழந்தவற்றை மீட்டெடுக்கக் காத்திருந்தது. அவர்களுடைய குலம் சிதைந்து சின்னாபின்னமாகி இருந்தது. அவர்களது அரண்மனைகள், அவர்கள் கட்டிய கோவில்கள், வெட்டிய குளங்கள், செதுக்கிய சிலைகள், உருவாக்கிய பாதைகள் எல்லாம் எல்லாம் மண்மூடிப் போயிருந்தன.
காடும் முழுமையாக அழிந்த பின்னும் ஒரே ஒரு விதை மட்டும் உயிர்ப்புடன் இருந்தது. உரிய காலத்தில் மண் இளகிக் கொடுத்தது. அந்த விதையின் மேல் வெளிச்சம் பட்டது. மழைத்துளி விழுந்தது. அந்த ஒற்றை விதை இன்னொரு காட்டை உயிர் பெறச் செய்ய மெல்லக் கண் மலர்ந்தது. செம்பியனின் வீழ்ச்சியும், கோப்பெருஞ் சிங்கனின் எழுச்சியும் ஒரே காலத்தில் நடக்கத் தொடங்கின.
ஆளப்பிறந்தவன் பாகம் 1 செம்பியன் வீழ்ச்சி - Product Reviews
No reviews available